15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர்; 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம்!

தேனியில் சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம்
தேனி போக்சோ சிறப்பு நீதிமன்றம் PT WEB

கடந்த 2019 ஆம் ஆண்டு கம்பம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர், அதே பகுதி சேர்ந்த 15 வயது சிறுவனுக்குக் கொலை மிரட்டல் விடுத்து, அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். பின்னர் அந்த சிறுவனை அடித்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். அந்த இளைஞரிடமிருந்து தப்பி வந்த சிறுவன் நடந்த சம்பவம் குறித்துப் பெற்றோரிடம் கூறியுள்ளான்.

இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த, சிறுவனின் பெற்றோர் கம்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விஜய்யை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை, தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று வழக்கு விசாரணை முடிவுற்று சாட்சியங்களின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் விஜய் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது. பின்னர் குற்றவாளி விஜய்க்கு போக்சோ சட்டம் பிரிவு 4(2) அடிப்படையில் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும், அபராத தொகையைக் கட்ட தவறினால் மேலும் ஒரு ஆண்டு மெய்க்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிட்டுள்ளது.

மேலும் சிறுவனை அடித்துத் துன்புறுத்தி காயம் ஏற்படுத்தியதால், இந்தியத் தண்டனைச் சட்டம் 323 கீழ் மேலும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 1000 ரூபாய் அபராதம் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com