பெண் உயிரிழப்பு
பெண் உயிரிழப்புpt desk

தேனி: கனமழை காரணமாக தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

ஆண்டிப்பட்டி அருகே கனமழை காரணமாக மலை கிராமத்தில் உள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட தொப்பையாபுரம் மலை கிராம காலனி பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவில் பெய்த கனமழை காரணமாக தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இதில், வீட்டிற்குள் இருந்த சின்னப்பொண்ணு (55) என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Death
Deathpt desk

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலாடும்பாறை காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கனமழை காரணமாக தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெண் உயிரிழப்பு
புதுக்கோட்டை | சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்

இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மயிலாடும்பாறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக் காலங்களில் சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்கள் மீது அரசு கூடுதல் அக்கறையோடு செயல்படவும் சமூக ஆர்வலரகள் அறிவுறுத்தி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com