\
தேனி: ராஜமாதாவே வருக வருக... சசிகலாவை வரவேற்று போஸ்டர்

தேனி: ராஜமாதாவே வருக வருக... சசிகலாவை வரவேற்று போஸ்டர்

தேனி: ராஜமாதாவே வருக வருக... சசிகலாவை வரவேற்று போஸ்டர்
Published on

ஆண்டிபட்டியில் சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக இளைஞர் அணி தலைவர் சின்னராஜா என்பவர் அமமுக கட்சியின் இளைஞர் பாசறை மாவட்ட தலைவர் புதுராஜாவோடு இணைந்து சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டியுள்ளார்.

ஆண்டிபட்டி ஒன்றிய அளவிலுள்ள முக்கிய பொறுப்பில் இருக்கும் சின்னராஜா ஒட்டியுள்ள போஸ்டரில் (தமிழ்நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர், தியாகத்தின் மறு உருவமே, எங்களின் இராஜமாதவே என்ற வாசகத்துடன்) ஆண்டிபட்டி நகரின் முருகன் தியேட்டர், ஜக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டபட்டுள்ளது.


சசிகலாவை ஆதரித்து அதிமுக நிர்வாகி போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com