rain inside govt bus
rain inside govt buspt desk

தேனி | அரசு பேருந்துக்குள் பெய்த மழை.. நனைந்தபடியே பயணம் செய்த அவலம் - அதிர்ச்சி வீடியோ

தேனியில் இருந்து கிளம்பிய அரசு பேருந்துக்குள் மழை நீர் கொட்டியதால் பயணிகள் அவதியடைந்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

தேனியில் இருந்து சின்னமனூர் செல்லும் அரசு போக்குவரத்துக் கழக நகர பேருந்து தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. அப்போது வீரபாண்டியை கடந்த போது, கன மழை பெய்துள்ளது. இதனால், பேருந்தின் மேற்கூரை பழுது காரணமாக பேருந்துக்குள் மழை நீர் கொட்டியுள்ளது.

rain inside govt bus
rain inside govt buspt desk

இந்நிலையில், பேருந்தின் இருக்கைகள் முழுவதும் மழைநீர் வடிந்ததால் பயணிகள் நின்று கொண்டே மழையில் நனைத்தபடி பயணித்துள்ளனர். பேருந்து நடத்துனரும் மழையில் நனைந்தவாறே பணியாற்றி வந்துள்ளார். இதை பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

rain inside govt bus
கொந்தளிக்கும் சீனாவின் மஞ்சள் ஆறு.. நெஞ்சை பதறவிடும் காட்சிகள்...

மழைக் காலங்களில் அரசு பேருந்துகளின் மேற்கூரையை சரி செய்ய போக்குவரத்துக் கழக நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com