தேனி மலைப்பாதையில் அடர்ந்த பனிப்பொழிவு காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
தேனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அண்மைக் காலமாக தொடர் மழை பெய்து வருவதால் பனிப்பொழி அதிகரித்துக் காணப்படுகிறது. அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவால் சாலைகள் மறையும் நிலை ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மழைப்பொழிவு மற்றும் பனிப்பொழிவால் சாலைகள் ஈரப்பதத்துடன் காணப்படுவதால், மலைப்பாதையில் செல்லும் வாகன ஓட்டிகள் பயணத்தின் போது அச்சத்துடன் சென்று வருகின்றனர்.