
தேனி மாவட்டத்தில் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சரி செய்யாமல் எச்சரிக்கைக்காக தென்னை கிடுக்குகள் நட்டு வைக்கப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டி.மீனாட்சிபுரம் பிரதான சாலையின் பக்கவாட்டிலுள்ள பள்ளத்தை சரி செய்யாமல், எச்சரிக்கைக்காக தென்னைக் கிடுகுகள் நட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. நெடுஞ்சாலைத்துறையின் இத்தகைய அலட்சியத்தால் இரவு நேரங்களில் விபத்துகள் அதிகமாக ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.