பட்டத்துக் காளையை வணங்கிய பொதுமக்கள்
பட்டத்துக் காளையை வணங்கிய பொதுமக்கள்pt desk

தேனி | மாட்டுப் பொங்கல் பண்டிகை - ஸ்ரீ நந்தகோபாலன் கேயில் பட்டத்துக் காளைக்கு பொதுமக்கள் மரியாதை!

கம்பத்தில் ஸ்ரீ நந்தகோபாலன் கேயிலில் மாட்டுப் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொதுமக்கள் பட்டத்து காளையை வணங்கிச் செல்கின்றனர்.
Published on

செய்தியாளர்: சுரேஷ்குமார்

தேனி மாவட்டம் கம்பத்தில் ஸ்ரீ நந்தகோபாலன் கோயிலில் மாட்டுப் பொங்கல் திருநாளை மக்கள் பாரம்பரிய விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து தம்பிரான் தொழு மாடுகளுக்கு பொங்கலிட்டு செங்கரும்பு படைத்து வழிபாடு வருகின்றனர்.

பட்டத்துக் காளையை வணங்கிய பொதுமக்கள்
பட்டத்துக் காளையை வணங்கிய பொதுமக்கள்pt desk

கம்பத்தில் 400 ஆண்டுகளுக்கு மேல் தொன்மை சிறப்பு வாய்ந்த ஸ்ரீ நந்தகோபாலன் சுவாமி கோயில் மற்றும் தம்பிரான் மாற்றுத்திறவில் ஆண்டுதோறும் தை இரண்டாம் தேதி மாட்டுப் பொங்கல் திருநாள் பாரம்பரிய திருவிழாவா கொண்டாடப்படுகிறது.

நந்தகோபாலன் கோவில் வளாகத்தில் உள்ள தம்பிரான் மாட்டு தொழுவத்தில் பராமரிப்பில் தற்போது 500க்கு மேற்பட்ட நாட்டு இன மாடுகள் உள்ளன.

பட்டத்துக் காளையை வணங்கிய பொதுமக்கள்
உரிமையாளரை தூக்கி வீசிய காளை.. நூலிழையில் உயிர் தப்பிய தருணம்..!

விவசாயிகள் நேர்த்திக்கடன் ஆகும் தொப்புள் கொடி சுற்றி பிறந்த தலைச்சான் காளைகளை கன்றுகளையும் மாட்டுப் பொங்கல் அன்று தம்புரான் தொழுக்கு காணிக்கையாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று மாட்டுப் பொங்கல் தினத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் புத்தாண்டை அணிந்து கையில் கரும்புத்தட்டை ஏந்தி ஊர்வலமாக மாட்டு வண்டிகளில் சென்று மாடுகளுக்கு செங்கரும்பு படைத்து வழிபடுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com