வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்புpt desk

தேனி: கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே பெய்த கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 75 வயது மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.
Published on

செய்தியாளர்: அருளானந்தம்

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் ஆயிஷா பீவி (75) என்பவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதில், மூதாட்டி ஆயிஷா பீவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Name board
Name boardpt desk

தகவல் அறிந்து அங்கு வந்த பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் இடுபாடுகளில் சிக்கி உயிரிழந்த மூதாட்டியின் உடலை மீட்டனர்.

வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
திருப்பத்தூர்: ரூ. 2,000 கடனை திருப்பிக் கேட்ட இளைஞர் குத்திக் கொலை

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com