\
தேனி: வழக்கறிஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தேனி: வழக்கறிஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

தேனி: வழக்கறிஞர் வெட்டிக் கொலை - மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
Published on

தேனியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் மதன். வழக்கறிஞரான இவர், இன்று மதியம் இருசக்கர வாகனத்தில் உத்தமபாளையம் - கம்பம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து வழக்கறிஞரை கொலை செய்த கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com