தேனி: கூலித் தொழிலாளி வீட்டினுள் நுழைந்த உடும்பு: தீயணைப்பு வீரர்கள் கையில் சிக்கியது

தேனி: கூலித் தொழிலாளி வீட்டினுள் நுழைந்த உடும்பு: தீயணைப்பு வீரர்கள் கையில் சிக்கியது

தேனி: கூலித் தொழிலாளி வீட்டினுள் நுழைந்த உடும்பு: தீயணைப்பு வீரர்கள் கையில் சிக்கியது
Published on

கூலித் தொழிலாளி வீட்டில் நுழைந்த உடும்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் அதை வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

தேனி மாவட்டம் போடி அமராவதி நகர் 3வது தெருவில் வசித்து வருபவர் மூக்கையா, இவரது வீட்டிற்குள் திடீரென உடும்பு ஒன்று புகுந்துள்ளது. இதனை பார்த்த மூக்கையா உடனடியாக போடி தீயணைப்பு மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 1 மணிநேரம் போராட்டத்திற்குப் பிறகு 3 அடி நீளமுள்ள உடும்பை பிடித்தனர். பின்பு அந்த உடும்பு வனத் துறையினரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கபட்டு வனப்பகுதிக்குள் விட்டபட்டது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com