தேனி: கர்ப்பிணியை கொன்ற கணவருக்கு தூக்கு தண்டனை- நீதிமன்றம் தீர்ப்பு
சின்னமனூரில் கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தேனி அருகே சின்னமனூரை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி கர்ப்பகவள்ளி. இவர்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏற்பட்ட தகராறு ஒன்றில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த கற்பகவள்ளியை கணவர் சுரேஷ் கடந்த 2015-ஆம் ஆண்டு கொலை செய்துள்ளார். இதில் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிந்து சுரேஷை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்த வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவடிந்த நிலையில் தற்போது நீதிபதி அப்துல் காதர் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், குற்றவாளி சுரேஷிற்கு 10000 ரூபாய் அபராதமும் சாகும்வரை தூக்கு தண்டனையும் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.