தேனி: தண்ணீர் குடத்தில் சிக்கிக் கொண்ட நாயின் தலை - போராடி பத்திரமாக மீட்பு

தேனி: தண்ணீர் குடத்தில் சிக்கிக் கொண்ட நாயின் தலை - போராடி பத்திரமாக மீட்பு
தேனி: தண்ணீர் குடத்தில் சிக்கிக் கொண்ட நாயின் தலை - போராடி பத்திரமாக மீட்பு

தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் குடத்திற்குள் தலையை விட்டு உயிருக்கு போராடிய நாயை தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில் வசித்து வருபவர் ஈஸ்வரி. இவர் கடந்த சில ஆண்டுகளாக செல்லப் பிராணியான நாய் ஒன்றை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று அவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த நாய் தண்ணீர் குடிப்பதற்காக வீட்டின் முன்பிருந்த குடத்தில் தலையை விட்டு தண்ணீர் குடித்ததுள்ளது.

இதையடுத்து தண்ணீர் குடித்துவிட்டு நாய் தலையை வெளியே எடுக்க முயன்றுள்ளது. அப்போது பிளாஸ்டிக் குடம், நாயின் கழுத்தில் மாட்டிக் கொண்டது. இந்நிலையில், தலையில் மாட்டிய குடத்துடன் நாய் அங்குமிங்கும் உயிருக்கு போராடிய நிலையில் சுற்றித் திரிந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் பெரியகுளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

துகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயணைப்புத் துறையினர், தலையில் குடத்துடன் சுற்றித் திரிந்த நாயை பிடித்து, நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பின்பு நாயின் குடத்தின் வளைவு பகுதியை நாயின் கழுத்தில் இருந்து அகற்றி நாயை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com