6 பேர் கொண்ட மருத்துவ தொழில் நுட்ப வல்லுநர்கள் மலை மேல் சென்றுள்ளதாக வருவாய் நிர்வாக ஆணையர் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக
மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் 13 பேர் திருப்பூரில் இருந்து
சென்றவர்கள் என்றும், 27 பேர் சென்னையில் இருந்து சென்றவர்கள் என்றும் அறியப்பட்டுள்ளது. இந்நிலையில் மீட்கப்பட்டவர்களில் 7
பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் தீருப்புரை சேர்ந்த ராஜசேகர், பாவனா, சாதனா, ஈரோட்டை சேர்ந்த நேகா,
சென்னையை சேர்ந்த மோனிஷா, பூஜா, சகானா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மலை மேல் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 6 பேர் கொண் மருத்துவக்குழு சென்றுள்ளதாக வருவாய் நிர்வாக
ஆணையர் சத்தியகோபால் தகவல் தெரிவித்துள்ளார். அவர்களிடம் முதலுதவி செய்யும் மருத்துவ சாதனங்கள் உள்ளதாகவும், மலைக்கு
கீழ் பகுதியில் 13 ஆம்புலன்ஸ் தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையே காட்டுத்தீயில் மீட்கப்பட்ட மேலும் 2 பேர்
மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பால்தேவ் தெரிவித்துள்ளார்.