குப்பையில் கொட்டப்படும் செண்டு மல்லி பூக்கள்
குப்பையில் கொட்டப்படும் செண்டு மல்லி பூக்கள்pt desk

தேனி | அமோக விளைச்சல்... அநியாய விலை – டன் கணக்கில் குப்பையில் கொட்டப்படும் செண்டு மல்லி பூக்கள்

ஆண்டிப்பட்டியில் போதிய விலை இல்லாத காரணத்தால் செண்டு மல்லி பூக்களை டிராக்டரில் கொண்டு வந்து குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: மலைச்சாமி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் செண்டு மல்லி பூக்கள் சாகுபடி நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் விளையும் பூக்கள், ஆண்டிப்பட்டியில் செயல்படும் மலர் சந்தையின் மூலம் ஏலம் விடப்படுகிறது தற்போது முகூர்த்த நாட்கள் இல்லாத காரணத்தால் பெரும்பாலான பூக்களின் விலை சந்தையில் குறைவாகவே உள்ளது.

இந்நிலையில், மாலைகளுக்கு பயன்படுத்தப்படும் செண்டு மல்லி பூக்களின் விலை மிகவும் குறைவாக உள்ளது. ஒரு கிலோ 10 ரூபாய்க்கு கீழ் சரிந்துள்ளது. அந்த விலைக்கு வாங்குவதற்குகூட வியாபாரிகள் அதிகமாக வராததால் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த பூக்களை விவசாயிகள் குப்பையில் கொட்டி விட்டுச் சென்றனர் இதனால் மலர ;சந்தைக்கு அருகில் டன் கணக்கில் பூக்கள் குவிந்துள்ளன.

குப்பையில் கொட்டப்படும் செண்டு மல்லி பூக்கள்
திருப்பரங்குன்றம் மலை விவகாரம்|மத மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிவு

இதையடுத்து அந்தப் பூக்களை பேரூராட்சி பணியாளர்கள் டிராக்டர்கள் மூலம் அள்ளிச் சென்று ஆண்டிபட்டி குப்பை கிடங்கில் கொட்டியுள்ளனர். விலை குறைவு காரணமாக செண்டு மல்லி பூக்களை சாகுபடி செய்திருந்த விவசாயிகளுக்கு கடும் வேதனை அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com