பெப்சி கோக் விற்க மாட்டோம்: தேனி மாவட்ட வணிகர் சங்கம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை பெப்சி, கோக் போன்ற அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என தேனி மாவட்ட வணிகர் பேரமைப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. கடந்த 3 நாட்களாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், சிறுவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பீட்டா அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வணிகர் சங்கத்தினர் பல்வேறு மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் வரை பெப்சி, கோக் போன்ற அந்நிய நாட்டு குளிர்பானங்களை வாங்கி விற்க மாட்டோம் என தேனி மாவட்ட வணிகர் பேரமைப்பு சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.