\
மாதத் தவணை செலுத்துவதில் பிரச்னை - அரிவாளுடன் வந்து மிரட்டிய நபர்

மாதத் தவணை செலுத்துவதில் பிரச்னை - அரிவாளுடன் வந்து மிரட்டிய நபர்

மாதத் தவணை செலுத்துவதில் பிரச்னை - அரிவாளுடன் வந்து மிரட்டிய நபர்
Published on

மாதச் சந்தா செலுத்தக்கூறி‌ய ஊழியரு‌டன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலகத்தை வாடிக்கை‌யாளர் ஒருவர் தாக்கி‌னார்.

தேனி மாவட்டம் கம்பம் கோம்பை ரோட்டை சேர்ந்தவர் கண்ணன். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கம்பம் வடக்கு காவல் நிலையம் அருகில் இருக்கும் தனியார் பைனான்சில் மாத தவணைக்கு டிவியும் ஹோம் தியேட்டரும் வாங்கியுள்ளார். இந்நிலையில் இந்த மாதம் மாதத்தவணை உரிய நேரத்திற்கு செலுத்தாததால் பஜாஜ் பைனான்சில் வசூல் செய்யும் வசூல்தாரர்கள் கண்ணனை போனில் தொடர்பு கொண்டு பணத்தை கட்ட சொல்லி உள்ளனர். அப்போது அவர்களுக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின்னர் கோபமடைந்த கண்ணன் அரிவாளுடன் பஜாஜ் பைனான்ஸ் அலுவலகத்திற்குள் சென்று போனில் பேசியவரை கேட்டு அலுவலகத்திற்குள் இருந்த கணினி, மேசை உள்ளிட்ட பொருட்களை அடித்து சேதப்படுத்தியுள்ளார். மேலும் அலுவலக ஊழியர்களை தாக்க முயன்றார். இந்தக் காட்சிகள் அங்கே இருந்த சிசிடிவியில் பதிவாகி உள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் இல்லை எனப் புகார் எழுந்துள்ளது. பட்டப்பகலில் அரிவாளுடன் அலுவலகத்திற்குள் நுழைந்த நபரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com