Actor Dhanush
Actor Dhanushpt desk

தேனி: ஒட்டுமொத்த குடும்பத்துடன் குலதெய்வம் கோயிலில் நடிகர் தனுஷ் தரிசனம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி மற்றும் போடி அருகேயுள்ள குல தெய்வம் கோயில்களில் நடிகர் தனுஷ் தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார்.
Published on

செய்தியாளாகள்: மலைச்சாமி, என்.திருக்குமார்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள முத்துரெங்கபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் தந்தையின் குலதெய்வம் கோயிலான கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் கோவிலில் தனது அண்ணன் செல்வராகவன் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றார்.

அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த மூதாட்டிகள் சிலர், “சொந்த ஊருக்கு வந்த நடிகர் தனுஷ், ஊரில் உள்ளவர்களிடம் வந்து பேசிவிட்டு சென்றால் தானே நன்றாக இருக்கும். வந்துவிட்டு எங்கள் யாருடனும் பேசாமலே சென்றுவிட்டார்” என்று ஏமாற்றத்துடன் கூறினர்.

Actor Dhanush
Actor Dhanushpt desk
Actor Dhanush
பிறந்தநாளன்று குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்த நடிகர் யோகி பாபு!

இதையடுத்து தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சங்கராபுரம் கிராமத்தில் அமைந்துள்ள தாயாரின் குலதெய்வம் கோயிலான கருப்புசாமி கோவிலுக்கு நடிகர் தனுஷ் அவரது இருமகன்கள், அவரது தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா மற்றும் தாயார், சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன், 2 சகோதரிகள் உள்ளிட்ட குடும்பத்தினருடன் சொந்த ஊருக்கு வருகை தந்து குல தெய்வம் கோவிலில் வழிபட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com