\
தேனி: போடி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஆர்பரித்துக் கொட்டும் அருவி

தேனி: போடி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஆர்பரித்துக் கொட்டும் அருவி

தேனி: போடி பகுதியில் பெய்யும் தொடர் மழையால் ஆர்பரித்துக் கொட்டும் அருவி
Published on

போடி பகுதியில் பெய்யும் தொடர் மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடி மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான பெரியாத்துகோம்பை, குரங்கணி, பிச்சாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக பெரியாத்துகோம்பை பகுதியில் உள்ள அருவியில் நீர்வரத்து அதிகரித்து மழைநீர் வெள்ளம்போல் அருவியாக கொட்டி வருகிறது.

இதனால் விவசாய நீர்ப்பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி வருவதாகவும், மேலும் நீர்வரத்து பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினால் தண்ணீர் தட்டுப்பாடின்றி குளங்களுக்கு சென்று தேக்கி வைக்க முடியும் எனவும் விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com