தேனி: பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக தலைப்பொங்கலை கொண்டாடும் புதுமணத் தம்பதியினர்

தேனி: பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக தலைப்பொங்கலை கொண்டாடும் புதுமணத் தம்பதியினர்
தேனி: பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக தலைப்பொங்கலை கொண்டாடும் புதுமணத் தம்பதியினர்

பொங்கல் பண்டிகையை ஒட்டி புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் வைப்பதன் அவசியம் குறித்தும், பொங்கல் வைக்கும் முறை பற்றியும் எடுத்துக் கூறி புதுமணத் தம்பதியினர் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், புதுமண தம்பதியினர் கொண்டாடும் முதல் தலைப்பொங்கல் என்றால் கூடுதலான உற்சாகம் ஏற்படும்.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அன்மையில் திருமணமான புதுமண தம்பதிகளுக்கு பொங்கல் வைப்பது குறித்தும் பொங்கல் பண்டிகையின் பாரம்பரியம் குறித்தும் எடுத்து விளக்கி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.

எவ்வாறு பொங்கல் வைப்பது, பொங்கல் செய்ய என்னென்ன பொருட்களை பயன்படுத்துவது என்பதனை நகைச்சுவையாக எடுத்துக்கூறி புதுமணப் பெண் பொங்கல் வைக்க உதவினார்களும் பெற்றோரும் உதவினர்.

பொங்கல் பொங்கி வரும்போது எவ்வாறு குலவி சத்தமிட வேண்டும் என்பன உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரியம் குறித்தும் வருங்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூறும் நிகழ்வாக இந்த நிகழ்வு அமைந்தது.

தமிழகம் முழுவதும் ஒரே குடும்பமாக உற்சாகத்தோடு பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையை புதுமண தம்பதியினர் குதூகலத்தோடு கொண்டாடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com