தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், அதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சென்னை புறநகரில் சட்ட விரோதமாக தண்ணீர் திருடப்படுவது புதிய தலைமுறை கள ஆய்வில் அம்பலமாகியுள்ளது.
சென்னையை சுற்றியுள்ள ஆவடி, அம்பத்தூர், அயப்பாக்கம், மேடவாக்கம், போரூர், செங்குன்றம் உள்ளிட்ட பல பகுதிகளில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து எடுக்கப்படும் தண்ணீர் சென்னை மாநகரில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளின் இலவச மின்சாரத்தை பயன்படுத்தி தண்ணீர் எடுக்கும் சில கும்பல், அதை அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபத்தையும் ஈட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தொடர்ந்து ஒரே இடத்தில் தண்ணீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக அப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.