நீலகிரி மாவட்டம் கூடலூரில் சீல் வைக்கப்பட்ட நியாயவிலை கடையிலிருந்து 56,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
நீலகிரி மாவட்டம் ராஜகோபாலபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மகளிர் நியாயவிலை கடையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை அடுத்து அதனை அதிகாரிகள் மூடினர். அதன்பின்னும், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் சிலர் கடையை திறந்து பொருட்களை எடுத்துச்சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியது. அதனையடுத்து, அந்தக் கடைக்கு வட்டவழங்கல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இன்றைய ஆய்வில், கடையிலிருந்து 56,000 ரூபாய் மதிப்பிலான பொருட்கள் காணாமல் போனது தெரியவந்தது. அதனையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் அப்துல் ரகுமான் கொடுத்த புகாரின் பேரில், தலைமறைவாக உள்ள நியாயவிலை கடை விற்பனையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.