திருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை

திருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை

திருடுபோன பைக் : ஜிபிஎஸ் மூலம் 100 கி.மீ பயணித்து பிடித்த காவல்துறை
Published on

சென்னையில் திருடுபோன விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை, ஜிபிஎஸ் மூலமாக சுமார் நூறு கிலோமீட்டர் பின்தொடர்ந்து காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

சென்னை கீழ்பாக்கம் மேடவாக்கம் சாலையைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரின் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் திருடுபோனது. தமது இருசக்கர வாகனத்தில் ஜி.பி.எஸ். தொழில்நுட்ப கருவி பொருத்தியுள்ள தகவலுடன், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு புறப்பட்ட காவலர்கள், புஷ்பராஜின் செல்போன் மூலம் இருசக்கர வாகனம் பயணிக்கும் திசையை கண்டறிந்து பின்தொடர்ந்து சென்றனர். 

சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவு சென்ற அவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் கூவத்தூர் அருகே வாகனத்தை கண்டறிந்தனர். இதையடுத்து இருசக்கர வாகனத்தை திருடிச்சென்ற மேக சூர்யா என்பவரையும், அவரது நண்பரான வினோத்குமாரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com