சின்னத்திரை நடிகர் ராஜ்கமல் - லதாராவ் தம்பதி வீட்டில் திருட்டு... இருவர் கைது!
சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 15-வது தெரு பகுதியில் கடந்த 9ஆம் தேதி இரவு பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான ராஜ்கமல் - லதா ராவ் வீட்டில் லட்ச ரூபாய் மதிப்பிலான டிவி, நீர் மோட்டார் திருடு போனது. அந்நேரத்தில் அடுத்த வீடான பாஜக பிரமுகர் பொன் பிரபாகர் என்பவர் வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்படிருந்த அவருடைய கார் ஒன்றும் திருடு போனது.

திருட்டு சம்பவம் தொடர்பாக இரு வீட்டாரும் மதுரவாயல் போலீசில் புகார் அளித்ததனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த காஜா மெய்தீன் (38) மற்றும் திருவெற்றியூர் பகுதியைச் சேர்ந்த அமீன் உதீன் (32) ஆகிய இருவரை மதுரவாயல் போலீசார் கைது செய்தனர். இருவரிடமிருந்தும், திருடப்பட்ட டிவி மற்றும் கார் இரண்டையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த மதுரவாயல் போலீசார் வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.