நாளை வரை திரையரங்குகள் மூடல்

நாளை வரை திரையரங்குகள் மூடல்

நாளை வரை திரையரங்குகள் மூடல்
Published on

கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனை சற்று முன்பு வெளியிட்ட அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும், தொடர்ந்து மருத்துவ உதவிகள் செய்தும் அவரது உறுப்புகளை செயல்பட வைப்பதில் சிக்கல் நீடிக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் பழனிசாமியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின், அழகிரி ஆகியோர் அவரது இல்லத்தில் சந்தித்தனர். சுமார் 20 நிமிடங்கள் சந்திப்பு நீடித்தது. மேலும் இந்தச் சந்திப்புக்கு பின்னர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வந்தனர். காவேரி மருத்துவமனையில் திமுக முக்கிய நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை செய்த பின், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை ஸ்டாலின் சந்தித்தார். 

இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை குறித்த செய்திகளால் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் இன்று மாலை முதல் நாளை வரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com