பழனியில் துப்பாக்கிச்சூடு - தியேட்டர் அதிபர் கைது

பழனியில் துப்பாக்கிச்சூடு - தியேட்டர் அதிபர் கைது

பழனியில் துப்பாக்கிச்சூடு - தியேட்டர் அதிபர் கைது
Published on

பழனியில் இடப்பிரச்னையில் 2 பேரை துப்பாக்கியால் சுட்ட தியேட்டர் அதிபர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவில் 12 செண்ட் இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தை தங்களுக்கு சொந்தமான இடம் என்று கூறி பழனிசாமி மற்றும் சுப்ரமணி ஆகியோர் சுத்தம் செய்து வந்துள்ளார். ஆனால் திரையரங்கு உரிமையாளர் நடராஜன் அது தனக்கு சொந்தமான இடம் எனக்கூறினார்.

இதையடுத்து இருத்தரப்பினருக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நடராஜன் தனது கைத்துப்பாக்கியால் அவர்களை சுட்டார். இதில்
துப்பாக்கி குண்டு பாய்ந்த பழனிசாமி மற்றும் சுப்ரமணி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய தியேட்டர் உரிமையாளர் நடராஜனை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் நடராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com