தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு

தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு

தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை- அமைச்சர் கடம்பூர் ராஜு
Published on

தியேட்டர்களை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.


இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

மக்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்றும். கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்பிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com