\
ஆன்லைன் சீட் விளையாட்டால் சரிந்த வாழ்க்கை : கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர்

ஆன்லைன் சீட் விளையாட்டால் சரிந்த வாழ்க்கை : கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர்

ஆன்லைன் சீட் விளையாட்டால் சரிந்த வாழ்க்கை : கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட வாலிபர்
Published on

விருதுநகரில் ஆன்லைன் விளையாட்டில் பணம் தோற்ற விரக்தியில் வாலிபர் ஒருவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் சூலக்கரை வீரப்பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து(20). இவர் நேற்று மாலை முதல் காணவில்லை என்று விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் அவரது தந்தை மகராஜன் புகார் அளித்திருந்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த விருதுநகர் சூலக்கரை போலீஸார் பேச்சிமுத்துவை தேடி வந்தனர்.

இந்நிலையில் விருதுநகர் மாத்தநாயக்கன்பட்டி சாலையில் உள்ள கிணற்றில் இருந்து பேச்சிமுத்து சடலமாக மீட்கப்பட்டார். பேச்சிமுத்து ஆன்லைன் விளையாட்டில் 12 ஆயிரம் ரூபாய் தோற்றதாக கூறப்படுகிறது. இதற்காக வீட்டில் கண்டித்துள்ளனர்.

இதனால் விரக்தியில் இருந்த அவர் நேற்று இரவு மாத்த நாயக்கன்பட்டி சாலையில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com