\
மதுபோதையில் 3வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர்

மதுபோதையில் 3வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர்

மதுபோதையில் 3வது மாடியில் இருந்து விழுந்த இளைஞர்
Published on

சென்னை தண்டையார்பேட்டையில் மதுபோதையில் இருந்த இளைஞர் 3வது மாடியில் இருந்து 4 வயது சிறுமி மீது விழுந்ததில் அந்தச் சிறுமி படுகாயமடைந்தார். 

சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரது மகள் தன்யஸ்ரீ தனது தாத்தாவுடன் கடைக்கு சென்றபோது இந்தச் சம்பவம் நடைபெற்றது. இதையடுத்து சிறுமி தன்யஸ்ரீ சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேபோல மதுபோதையில் கீழே விழுந்த இளைஞரும் ராயப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தாத்தாவுடன் கடைக்கு சிறுமி சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்தது. மூன்றாவது மாடியில் போதையில் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்தபோது அந்த நபர், தவறி கீழே விழுந்தார். அப்போது கீழே நடந்து கொண்டிருந்த சிறுமி மீது விழுந்ததால் சிறுமி படுகாயம் அடைந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com