\
லாக்கப் சிறையில் இளைஞர் உயிரிழப்பு - போலீசார் மீது உறவினர்கள் புகார்

லாக்கப் சிறையில் இளைஞர் உயிரிழப்பு - போலீசார் மீது உறவினர்கள் புகார்

லாக்கப் சிறையில் இளைஞர் உயிரிழப்பு - போலீசார் மீது உறவினர்கள் புகார்
Published on: 

மதுரை கரிமேடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் காவல்துறையினர் தாக்கியதில் உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன். மற்றொரு ஆட்டோ ஓட்டுநருடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுதொடர்பான விசாரணைக்காக கரிமேடு காவல்துறையினர் மணிகண்டனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த நிலையில் காவல் நிலையத்தில் இருந்த மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. 

அப்போது மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனக்கூறியதாக சொல்லப்படுகிறது. மணிகண்டன் உடல் கூறாய்வுக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கரிமேடு காவல்துறையினர் தாக்கியதால் தான் மணிகண்டன் உயிரிழந்துவிட்டதாக அவரது உறவினர்கள் புகார் கூறியுள்ளனர். 

மேலும் மணிகண்டனை காண தாங்கள் காவல் நிலையம் சென்ற போது அவர் நடக்க முடியாத நிலையில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மணிகண்டன் உறவினர்கள் கூறிய புகாரை கரிமேடு காவல்துறையினர் மறுத்துள்ளனர். மேலும் தாங்கள் மணிகண்டனை ‌தாக்கவில்லை என காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com