கஞ்சா போதையில் நள்ளிரவில் இளைஞர் செய்த செயல்; உடந்தையாக வந்த பெண் தோழி - வெளியான சிசிடிவி வீடியோ!

சென்னையில், நள்ளிரவு நேரத்தில் பெண் தோழியுடன் வந்து பைக்கை திருடிச் செல்லும் இளைஞரின் வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண் தோழியுடன் பைக் திருடும் இளைஞர்
பெண் தோழியுடன் பைக் திருடும் இளைஞர் PT WEB

சென்னை அசோக் நகரைச் சேர்ந்தவர் சஞ்சய். தனியார் கல்லூரியில் படித்து வரும் சஞ்சய், கல்லூரி செல்வதற்காக 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை வாங்கி வைத்துள்ளார்.

சென்னையில் பெண் தோழியுடன் பைக் திருடும் இளைஞர்  வீடியோ வைரல்
சென்னையில் பெண் தோழியுடன் பைக் திருடும் இளைஞர் வீடியோ வைரல்

இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி இரவு வழக்கம் போல சஞ்சய், தனது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு உறங்கச் சென்றுள்ளார். காலை எழுந்து வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். சஞ்சய் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார்.

அப்போது, இளைஞர் ஒருவர் தனது பெண் தோழியுடன் இரு சக்கர வாகனத்தில் வந்து நோட்டமிட்டு, பின்னர் சஞ்சயின் விலை உயர்ந்த பைக்கின் சைடு லாக்கை கல்லால் உடைத்து, தள்ளிக்கொண்டே சென்று தெருமுனையில் நிறுத்துவதும், பின்னர் பெண் தோழி வைத்திருந்த பைக்கை தள்ளி வருமாறு அந்த நபர் கூறிய போது, தள்ளமுடியாமல் அந்த பெண் கீழே விழுகிறார். சுமார் அரை மணி நேரமாகத் திருடிய வாகனத்தைக் கொண்டு செல்ல முடியாமல் இருவரும் போராடிய காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்தது.

இதனையடுத்து, இருவரும் சந்தேகம் வராதபடி பைக்கை தள்ளிக்கொண்டே சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சஞ்சய் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இருவரையும் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com