வாணவேடிக்கைகளுடன் கொடி இறக்கம்...நிறைவுபெற்றது உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா

வாணவேடிக்கைகளுடன் கொடி இறக்கம்...நிறைவுபெற்றது உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா
வாணவேடிக்கைகளுடன் கொடி இறக்கம்...நிறைவுபெற்றது உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா

உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது. வண்ணமிகு வானவேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க 5 மினாராக்களிலும் ஒரே நேரத்தில் கொடிகள் இறக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உள்ள உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்காவின் 466 -வது கந்தூரி விழா கடந்த டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 1-ஆம் தேதி பீர் அமரவைத்தல், 2-ந்தேதி சந்தனகூடு ஊர்வலம், 3-ந்தேதி ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி, 4-ந்தேதி பீர் கடற்கரை செல்லும் நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிலையில் 14 நாட்கள் நடைபெற்ற திருவிழாவின் கடைசி நாளான நேற்று இரவு தர்கா பரம்பரை கலிபா துவா ஓதிய பிறகு 5 மினாராவில் ஒரே நேரத்தில் கொடி இறக்கப்பட்டது. வண்ணமிகு வான வேடிக்கைகள், அதிர்வேட்டுகள் முழங்க ஒரே நேரத்தில் தர்காவின் 5 மினாராக்களிலும் கொடிகள் இறக்கப்பட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com