
“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!
IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பெரியார் நகரில் வசிக்கும் பாபு என்பவர் உடல்நலக் குறைவால கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி உயிரிழந்தார். உயிரிழந்த பாபுவின் துக்க நிகழ்ச்சியில் சாமி கும்பிட, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் என்பவரது மனைவி மல்லிகா (65), மாரிமுத்து என்பவரின் மகள் கோமதி (14), வினாயகம் என்பவரது மகள் ஹேமலதா (16) ஆகியோர் குடும்பத்துடன் நேற்று திருத்தணி வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர்கள் 50 அடி ஆழத்துடன் செயல்படாமல் உள்ள கல்குவாரிக்குச் சென்றுள்ளனர். இதையடுத்து கல்குவாரியில் இறங்கிய கோமதி மற்றும் ஹேமலதா ஆகிய இருவரும் கல்குவாரி நீரில் வழுக்கி விழுந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து குழந்தைகளை காப்பாற்ற மல்லிகா என்பவரும் குதித்துள்ளார். இதில் 3 பேரும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருத்தணி தீயணைப்புத் துறை வீரர்கள், 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த திருத்தணி போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.