பெண் எஸ்.ஐ வசந்தி
பெண் எஸ்.ஐ வசந்திpt web

திருமண வீட்டாரை மிரட்டிய பெண் எஸ்.ஐ?; திருமண கோலத்தில் போராட்டத்தில் குதித்த தம்பதி; வீடியோ வைரல்!

சென்னையில், திருமணத்திற்குப் பேனர் வைத்த விவகாரத்தில், அதனை அகற்றச் சென்ற பெண் உதவி ஆய்வாளர் திருமண வீட்டாரைத் தகாத வார்த்தையில் பேசும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Published on

சென்னை அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவர் தினேஷ். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தேஜா என்பவருக்கும் பட்டாபிராம் பகுதியில் உள்ள திருமண மண்டபம் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்களை வாழ்த்தி வரவேற்கும் விதமாகத் திருமண தம்பதியின், நண்பர்கள் ஆங்காங்கே பேனர் வைத்துள்ளனர். இந்த பேனர்களை அகற்றுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். அப்போது தினேஷ் "திருமணம் முடிந்தவுடன் பேனர்களை அகற்றி விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் இதனைப் பொருட்படுத்தாத காவல்துறையினர் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்ததால், திருமண வீட்டாருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த, போலீசார் மணமகன் தினேஷை வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதனால் மணப்பெண்ணும் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

அப்போது அங்கிருந்த, பெண் உதவி ஆய்வாளர் வசந்தி திருமண வீட்டாரைப் பார்த்துத் தகாத வார்த்தைகளில் திட்டி மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதனை தொடர்ந்து, காவல்துறையினரைக் கண்டித்து, திருமண தம்பதி மணக் கோலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com