ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர் திடீர் மரணம்

ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர் திடீர் மரணம்

ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்டவர் திடீர் மரணம்
Published on

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிட்ட பெண் மாரடைப்பால் திடீர் மரணம் அடைந்துள்ளார்.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் உள்ள 5067 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 107 இடங்களில் முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதில் அதிமுக கூட்டணி 59 இடங்களிலும், திமுக கூட்டணி 44 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

திருச்செந்துர் ஊராட்சி உட்பட்ட 5 வது வார்டு மேலத் திருச்செந்தூர் பஞ்சாயத்து உள்ளது. இந்த பஞ்சாயத்தில் மொத்தம் 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பேச்சியம்மாள் (75) க/பெ ஜெயபாண்டி என்பவரும் போட்டியிட்டுள்ளார். ஏற்கனவே இவர் திருச்செந்தூர் கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளர்,

இந்நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருந்த நிலையில் நேற்று இரவு லேசான நெஞ்சுவலியில் படுத்தவர் திடிரென மாரடைப்பால் காலமானார். இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com