திருமணம் மீறிய உறவை கண்டித்த கணவன்; கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி! விசாரணையில் வெளிவந்த உண்மை!

மானாமதுரையில் திருமணம் மீறிய உறவைக் கண்டித்த கணவனைக் கூலிப் படையை வைத்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.
 சதுரகிரி புதைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் விசாரணை
சதுரகிரி புதைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் விசாரணை PT WEP

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மூங்கிலூரணியில் சதுரகிரி - ராதிகா தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சதுரகிரி வெளியூர் சென்றுள்ளதாக ரதிகா அனைவரிடம் கூறி வந்துள்ளார். ரதிகாவின் பேச்சில் சந்தேகம் அடைந்த சதுரகிரியின் தந்தை மலைச்சாமி, மானாமதுரை காவல்நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மகனைக் காணவில்லை எனப் புகார் அளித்துள்ளார்.

சதுரகிரி உடல் புதைக்கப்பட்ட இடம்
சதுரகிரி உடல் புதைக்கப்பட்ட இடம்

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மற்றொரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதுரகிரியின் மகன் துரைசிங்கத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், தனது தந்தையைத் தாய் ராதிகா கூலிப்படையினரை வைத்து கொலை செய்து கிழமேல்குடி‌ அருகே உள்ள புதூர் காட்டுப் பகுதியில் புதைத்ததாகக் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் வருவாய்த் துறையினர், காவல்துறையினர் மற்றும் மருத்துவத்துறையினர், தடயவியல் நிபுணர் ஆகியோர் சதுரகிரி புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து சதுரகிரியின் மனைவி ராதிகாவை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், ராதிகா திருமணம் மீறிய உறவில் மற்றொரு நபருடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,. இது சதுரகிரிக்குத் தெரிய வரவே மனைவியைக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராதிகா கூலிப்படை வைத்து சதுரகிரியைக் கொலை மனைவி செய்ததுள்ளார். மேலும் தனக்கு ஏதும் தெரியாதது போல் நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது.

 சதுரகிரி புதைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் விசாரணை
‘கடமைகளில் கவனம் செலுத்துதல்’ என்று கட்டுரை எழுதிய 10ம் வகுப்பு மாணவன்.. நெகிழ்ந்துபோன பிரதமர் மோடி

இது சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வழக்கில் தொடர்புடைய துரைசிங்கம், ராதிகா, அங்காளபரமேஸ்வரி, ராசாய்யா சந்தோஷ் ஆகிய 5 பேரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காதல் கணவனை கூலிப்படை வைத்து மனைவியே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 சதுரகிரி புதைக்கப்பட்ட இடத்தில் அதிகாரிகள் விசாரணை
கர்நாடகா: பாழடைந்த வீட்டில் நள்ளிரவில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் - அதிர்ச்சி பின்னணி?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com