வைகை ஆற்று அருகே திடீரென பெருக்கெடுத்த ஊற்று? - காரணம் உள்ளே?

வைகை ஆற்று அருகே திடீரென பெருக்கெடுத்த ஊற்று? - காரணம் உள்ளே?
வைகை ஆற்று அருகே  திடீரென பெருக்கெடுத்த ஊற்று? - காரணம் உள்ளே?

வைகை ஆற்றின் அருகே திடீரென ஊற்றுபோல நீர் பெருக்கெடுத்து ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி அருகே உள்ள குண்ணூர் பகுதி வைகை ஆற்று பகுதியில் சிலர் தோட்டத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் ஊற்று நீர் பெருக்கெடுத்து ஓடியதைக் கண்டனர். அப்போது திடீரென அந்த ஊற்றிலிருந்து வெள்ளை நிறத்தில் பால் போல ஊற்று வந்துள்ளது. ஆற்றுப்பகுதி அருகில் எவ்வித தொழிற்சாலைகள் இல்லாத பட்சத்தில் எப்படி பால் போல ஊற்று வர முடியும் என மக்கள் அச்சமடைந்தனர்.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ஊற்றின் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு கூட்டு குடிநீர் திட்டத்திற்கான குழாய் உடைந்திருப்பதும், தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காக அதில் குளோரின் பவுடர் கலந்திருந்ததால் தான் ஊற்றுபோல வெள்ளை நிறத்தில் நீர் பெருக்கெடுத்தது வந்தது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com