மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: மெல்ல உயரும் நீர்மட்டம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: மெல்ல உயரும் நீர்மட்டம்

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்: மெல்ல உயரும் நீர்மட்டம்
Published on

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர் நேற்று முன்தினத்துடன் நிறுத்தப்பட்டதால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயரத் தொடங்கியுள்ளது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 28 ஆம் தேதி வரை விநாடிக்கு 8 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது. அணைக்கான நீர்வரத்து குறைந்ததால், நீர் இருப்பு மெல்ல சரிந்து வந்தது. நீர்மட்டம் 108.35 அடியாக இருந்த நிலையில் பாசனத்திற்கான நீர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து 20 நாட்களுக்குப் பின் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தற்போது நீர் இருப்பு 76.14 டிஎம்சியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 895 கன அடியாகவும் உள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com