செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் நீர்த்திறப்பு விநாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 23.60 அடியாக நீர் இருப்பு உயர்ந்தது. மேலும் ஏரிக்கு வினாடிக்கு 775 கனஅடி நீர்வரத்து உள்ளதால் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

ஏற்கனவே 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழைபெய்யும் பட்சத்தில் நீர் திறப்பு அதிகரிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com