திருவள்ளூர் சிறுமி வன்கொடுமை
திருவள்ளூர் சிறுமி வன்கொடுமைweb

திருவள்ளூர் வன்கொடுமை| 13 நாட்களுக்கு பிறகு சிக்கிய குற்றவாளி.. அடையாளம் காட்டிய சிறுமி!

திருவள்ளூரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி 14 நாட்கள் கடந்த நிலையில், குற்றவாளியை சிறுமி அடையாளம் காட்டியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Published on

திருவள்ளூர் மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த 12ஆம் தேதியன்று பள்ளிக்குச் சென்றுள்ளார். அன்று சனிக்கிழமை என்பதால் சுமார் 12.45 மணியளவில் வகுப்பு முடிந்து வீட்டுக்குக் கிளம்பியுள்ளார். அப்பகுதியில் உள்ள ரயில் நிலையத்தின் ஓரத்தில் சிறுமி நடந்து சென்றபோது, சிறுமியைப் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அவரைத் துன்புறுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சிறுமி வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை அவரது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். பின்னர் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தரப்பில் இருந்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

குற்றவாளியை பிடிக்க முடியாமல் திணறிய போலீஸ்..

சம்பவம் நடந்து பதிமூன்று நாட்கள் ஆகியும் குற்றவாளியைப் பிடிப்பதில் காவல்துறையினருக்கு பெரும் சிக்கல் இருந்தது. ஒரு சிறிய கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவை தான் முக்கிய ஆதாரமாக கொண்டு காவல் துறையினர் குற்றவாளியை தேடி வந்தனர்.

பெற்றோர் புகார் கொடுத்த நிலையில், சம்பவ இடத்தை ஆராய்ந்த போது தான் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை கண்டு காவல் துறை சுதாரித்தனர். அங்கு பொருத்தப்பட்ட 3 சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்த போது, கடை மூடிய நேரத்தில், அதாவது நண்பகல் 12 மணிக்கு மேல், மர்ம நபர் ஒருவர் அந்த கடை அருகில் நிற்பதும், அங்கு நோட்டமிடுவதும், அதன் பின் 8 வயது சிறுமி பள்ளி முடிந்து தனியாக சென்ற போது பின் தொடர்ந்த அந்த நபர் சிறுமியை தூக்கி செல்லும் அதிர்ச்சி காட்சிகள் பதிவானதை கண்டு விசாரணையை துரிதப்படுத்தினர்.

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைpt

அதில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளியின் புகைப்படம் மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. நான்கு மொழிகளில் குற்றவாளியின் புகைப்படத்தை தேடப்படும் குற்றவாளி என அச்சடித்து வெளியிட்டிருந்த காவல்துறையினர் தொடர்ச்சியாக அந்த நபரைத் தேடி வந்தனர். அவர் வட மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் அவரைக் கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.

சிக்கிய குற்றவாளி..

ஏற்கனவே இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில் உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளாதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

புகைப்படங்களை வெளியிட்டு குற்றவாளி குறித்த தகவல் கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனக் காவல்துறையினர் தெரிவித்திருந்ததோடு, வன்கொடுமை நடைபெற்ற சமையத்தில் அப்பகுதியில் இருந்த செல்போன் எண்களையும் ஆய்விற்கு உட்படுத்தியிருந்தனர். கிட்டத்தட்ட 1 1/2 லட்சம் செல்போன் எண்கள் ஆய்விற்கு உட்பட்டிருந்தது.

சிறுமி வன்கொடுமை
சிறுமி வன்கொடுமை

இந்நிலையில்தான் காவல்துறையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் தற்போது குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியும் குற்றவாளியை உறுதிசெய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுமி வன்கொடுமை
சிறுமி வன்கொடுமை

இந்நிலையில் காவல்துறையினரின் முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் குற்றவாளி யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எங்கிருந்து வந்தார் ? ஏற்கனவே குற்றப் பின்னணி கொண்டவரா ? என்பன போன்ற பல்வேறு கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com