லோடு லாரியில் இருந்த தக்காளியை கேட்டு வாங்கி லாவகமாக கேட்ச் பிடித்த Bikers #ViralVideo

தக்காளி விலை விண்ணை முட்டும் அளவுக்குச் சென்றுகொண்டிருக்கும் வேளையில், வேலூரில் இளைஞர்கள் இருவர் நூதன முறையில் தக்காளியை வாங்கிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

வேலூரில் கொணவட்டம் பகுதியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுள்ளது. அதன்பின்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இருவர், வாகனத்தில் இருந்தவரிடம் “தக்காளி விலை அதிகமாக இருக்கிறது, கொஞ்சம் தக்காளியை தாருங்கள்” என கேட்டுள்ளனர்.

இதையடுத்து, லாரியில் இருந்த நபரும் தக்காளியை ஒவ்வொன்றாக எடுத்து வீசியுள்ளார். அவற்றை, இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் லாகவமாகப் பிடித்து பையில் போட்டுக்கொண்டு, லாரியில் இருந்தவருக்கு நன்றி தெரிவித்துச் சென்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com