துணைவேந்தர் நியமனத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு - கி.வீரமணி கண்டனம்
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தமிழர் அல்லாத ஒருவர் நியமிக்கப்படுவார் என்ற தகவலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் நியமிக்கபடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் கருத்து தெரிவித்துள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவது மாநில உரிமையை பறிக்கும் செயல் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தமிழகத்துக்கே தலைகுனிவு எனவும் வீரமணி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அனைத்து தரப்பினரும் இதற்கு வன்மையாக கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு கர்நாடகாவை சேர்ந்த எம்.கே சூரப்பாவை நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்