‌தமிழகத்துக்கு பஞ்சாப் அதிகாரிகளை பரிந்துரைத்த யுபிஎஸ்சி !

‌தமிழகத்துக்கு பஞ்சாப் அதிகாரிகளை பரிந்துரைத்த யுபிஎஸ்சி !

‌தமிழகத்துக்கு பஞ்சாப் அதிகாரிகளை பரிந்துரைத்த யுபிஎஸ்சி !
Published on

தமிழகத்தின் அடுத்த டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், மத்திய பணியாளர் தேர்வாணையம் பஞ்சாப்பை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்களை அந்த பதவிக்கு பரிந்துரைத்தது தமிழக அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது தமிழக டிஜிபியாக பதவி வகித்து வரும் டி.கே.ராஜேந்திரனின் பணிக்காலம் வரும் 30ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே அடுத்த சட்டம் ஒழுங்கு ‌டிஜிபியை தேர்வு செய்யும் பணியை தமிழக அரசு ‌கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கி, டிஜிபி பதவிக்கு தகுதியுடையவர்களின் பட்டியலை  மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைத்திருந்தது. 

இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து தலைமை செயலாளருக்கு ஐபிஎஸ் அதிகாரிகளை பரிந்துரைக்கும் கோப்பு வந்து சேர்ந்துள்ளது. கோப்பில், பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 5 ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் மத்திய பணியாளர் தேர்வாணைய அதிகாரிகள் கவனக்குறைவாக கோப்பினை அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அனுப்பிய ஐபிஎஸ் அதிகாரிகள் பெயர் கொண்ட புதிய கோப்பினை மத்திய பணியாளர் தேர்வாணையம் தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு செவ்வாய் அன்று இரவு அனுப்பி வைத்தது. எனவே இன்றைய தினமே தமிழக காவல்துறையின் அடுத்த ‌சட்டம் ஒழுங்கு டிஜிபியாக ஜே.கே.திரிபாதி, மிதிலேஷ் குமார் ஜா, லக்ஷ்மி பிரசாத் ஆகிய மூவரில் ஒருவரை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய டிஜிபி ஜே.கே.திரிபாதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com