\
அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது

அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது

அடையாளம் தெரியாத ஆண் சடலம் குளத்தில் மிதந்தது
Published on

கோவையில் உள்ள வாலாங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் தண்ணீரில் மிதந்து. காவல் துறையினர் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து உக்கடம் செல்லும் சாலையில், வாலாங்குளம் அமைந்து உள்ளது. இந்த குளத்தில் காலை அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்ததை சிலர் பார்த்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துரையினர் உடலை மீட்டு, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் எந்த பகுதியை சேர்ந்தவர், தற்கொலையா? அல்லது கொலையா? என்ற கோணத்தில் பந்தய சாலை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com