\
ஊராட்சித் தலைவிகளான முன்னாள் ஊராட்சி தலைவரின் இரு மனைவிகள்!

ஊராட்சித் தலைவிகளான முன்னாள் ஊராட்சி தலைவரின் இரு மனைவிகள்!

ஊராட்சித் தலைவிகளான முன்னாள் ஊராட்சி தலைவரின் இரு மனைவிகள்!
Published on: 

வந்தவாசி அருகே கோவில் குப்பம், வழுர் அகரம் ஆகிய இரண்டு ஊராட்சி மன்றத் தலைவர்களாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செல்வி தனசேகரன், காஞ்சனா தனசேகரன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி ஒன்றியத்தை சேர்ந்த வழூர்-அகரம் கிராமத்தை சேர்ந்தவர் தனசேகர். விவசாயியான இவர் இரு மனைவிகளோடு வழூரில் ஒரே குடும்பமாக வசித்து வருகிறார்.

இவர் வழூர்-அகரம் முன்னாள் ஊராட்சி தலைவராகவும் இருந்தார். இந்நிலையில், இந்த முறை தனது மனைவியான செல்வி தனசேகரனை வழூர் கிராம தலைவருக்கும், மற்றொரு மனைவியான காஞ்சனா தனசேகரனை கோவில் குப்பம் கிராமத் தலைவருக்கும் சுயேச்சையாக போட்டியிட வைத்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது வழுர் அகரம் மற்றும் கோவில்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருவரும் வெற்றி பெற்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com