\
நாமக்கல்: போஸ்டர் விவகாரத்தில் திமுகவினர் இடையே மோதல்

நாமக்கல்: போஸ்டர் விவகாரத்தில் திமுகவினர் இடையே மோதல்

நாமக்கல்: போஸ்டர் விவகாரத்தில் திமுகவினர் இடையே மோதல்
Published on
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி பூசலில், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
திருச்செங்கோடு நகர திமுக நிர்வாகிகள் நடேசன், கார்த்திகேயன் இடையே பனிப்போர் நிலவி வந்ததாக கூறப்பட்ட நிலையில், அது மோதலாக வெடித்தது. முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடேசன் தரப்பில் அச்சிடப்பட்ட சுவரொட்டிகளை கார்த்திகேயனின் அலுவலக சுவரிலும் ஒட்டியதாக தெரிகிறது. இதையடுத்து கார்த்திகேயன் ஆதரவாளர்கள், நடேசனின் ஆதராவளர்களில் ஒருவரின் வீட்டிற்குச் சென்று தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com