\
பழனி கோவில் நிலம் மோசடி
பழனி கோவில் நிலம் மோசடிweb

பழனி | கோயிலின் ₹100 கோடி மதிப்பிலான மடத்து நிலம் மோசடி.! வெளிவந்த உண்மை!

பழனி அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கோயில் உட்பட அரசு புறம்போக்கு சொத்துகள் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட சம்பவங்கள் அதிரடியாக அம்பலமாகியுள்ளன.
Published on
Summary

பழனியில் கோயிலின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம், போலி ஆவணங்கள், தள்ளுபடி செய்யப்பட்ட பழைய வாரிசுச் சான்றிதழ் எண், முன்னாள் வட்டாட்சியரின் போலி டிஜிட்டல் கையொப்பம் ஆகியவற்றை பயன்படுத்தி பத்திரப்பதிவு செய்யப்பட்டு மோசடி நடந்தது அம்பலமாகியுள்ளது.

முதலில் பழனி தண்டாயுதபாணிகோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்; ஆவணங்களைத் தயார் செய்த ஜெயபிரகாஷ் சிபிசிஐடியில் சரணடைந்தார். இதனைத் தொடர்ந்து, ஒட்டன்சத்திரத்தில் நாகணம்பட்டி நல்லசாமி என்பவருக்கு சொந்தமான 81செண்ட் நிலத்தைக் கைப்பற்ற, 2020இல் தள்ளுபடி செய்யப்பட்ட பழைய வாரிசுச்சான்றிதழ் எண்ணைப் பயன்படுத்தியுள்ளனர். மேலும், முன்னாள் வட்டாட்சியர் சுப்பையாவின் டிஜிட்டல் கையொப்பத்தைப் போலியாகப் பயன்படுத்தி போலிச்சான்று தயாரித்து, ஒட்டன்சத்திரம் சார்பதிவகத்தில் பத்திரப்பதிவு செய்துள்ளனர். இது முற்றிலும் போலியானது எனத் தற்போதைய ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் சஞ்சய்காந்தி உறுதி செய்துள்ளார்.

பழனி
பழனிPT

அடுத்ததாக பழனி கவுண்டர் ஈட்டேரிரோட்டில் உள்ள 55 செண்ட் அரசுபுறம்போக்கு நிலத்தை, கோயில் நிலம்பதிவு செய்யப்பட்ட அதே ஜூலை 06, 2026அன்று ஒரேநாளில் செட்டில்மெண்ட்பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபதிவான சரியாக 7ஆவது நிமிடத்தில்அதே நிலத்தை, சௌந்திர பாண்டியன் என்பவருக்கு 20 லட்சம் ரூபாய்க்கு கிரையம் செய்து, அடுத்த பத்திரத்தையும் சார்பதிவாளர் ஜஸ்டின்மணிகண்டன் அவசர அவசரமாகப் பதிவு செய்து கொடுத்துள்ளார். சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜெயபிரகாஷ், வழக்கறிஞர் சிவக்குமார் கூட்டணி அரங்கேற்றிய மெகா மோசடிகள் குறித்து, சிபிசிஐடிபோலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

பழனி கோவில் நிலம் மோசடி
பழனி: ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மோசடி.. சிபிசிஐடி விசாரணை தீவிரம்!!
பழனி கோவில் நிலம் மோசடி
பெரம்பலூர்| ஒரு கிராமத்தையே ஏமாற்றி கோடி கணக்கில் கொள்ளையடித்த கும்பல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com