தமிழ்நாடு
மின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு: சுப நிகழ்ச்சிக்கு தயாராக இருந்தபோது பரிதாபம்!
மின்சாரம் தாக்கி தாய், மகன் உயிரிழப்பு: சுப நிகழ்ச்சிக்கு தயாராக இருந்தபோது பரிதாபம்!
வேதாரண்யம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் தாயும், மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தேத்தாக்குடி வடக்கு தம்பிகவுண்டர் காட்டில் காளிதாசன் என்பவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். விரைவில் புதுமனை புகுவிழா நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், வீட்டின் சமையல் அறையில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இதை அறியாமல், மின் ஒயரை தொட்ட காளிதாசன் மகன் அழகியநாதனை மின்சாரம் தாக்கியது.
பதறிபோன அவரது தாய் மகனை காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து வேதாரண்யம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுமனை புகு விழா நடத்த வேண்டிய சூழலில், தாயும் மகனும் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.