\
சென்னை: நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 5 வயது சிறுவன்

சென்னை: நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 5 வயது சிறுவன்

சென்னை: நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த 5 வயது சிறுவன்
Published on
5 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சேத்துப்பட்டு ஹாஸ்டல் ரோட்டைச் சேர்ந்த கமல் கிஷோர், மருத்துவ உபகரணங்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகன் ஹித்தேஜ் (5), நேற்று தனது நண்பர்களுடன் சேர்ந்து வீட்டின் அருகில் உள்ள மற்றொரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றுள்ளார். அங்கு அடுக்குமாடி பின்புறம் உள்ள நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென ஹித்தேஜ் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து விட்டார். அங்கிருந்தவர்கள் சிறுவன் ஹித்தேஜை மீட்டு கீழ்ப்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுவன் ஹித்தேஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக. மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com