கிருஷ்ணகிரி: உண்டியலை உடைக்கும் முயற்சி தோல்வி-பாகங்களை உடைத்துவிட்டு அம்மன் சிலை திருட்டு

கிருஷ்ணகிரி: உண்டியலை உடைக்கும் முயற்சி தோல்வி-பாகங்களை உடைத்துவிட்டு அம்மன் சிலை திருட்டு
கிருஷ்ணகிரி: உண்டியலை உடைக்கும் முயற்சி தோல்வி-பாகங்களை உடைத்துவிட்டு அம்மன் சிலை திருட்டு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலமுருகன் கோயிலுக்குள் இரவு நேரத்தில் புகுந்த திருடர்கள், உண்டியலை உடைக்க முயன்றுள்ளனர். உண்டியல் உடைக்க முடியாத அளவு சுவற்றுடன் வலுவாக அமைக்கப்பட்டிருந்ததால் கோபமடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்த துர்கை அம்மன் சிலையின் கை கால் பாகங்களை தனித்தனியாக உடைத்து தூக்கி எறிந்துவிட்டு சிலையை மட்டும் எடுத்து சென்றனர்.

தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் கோவிலில் இருந்த தடயங்களை சேகரித்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதனை கண்டறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com