அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்திற்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் - முத்தரசன்

அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்திற்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் - முத்தரசன்
அனைத்துக் கட்சிக் கூட்ட தீர்மானத்திற்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் - முத்தரசன்

தமிழக அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானதுக்கு எதிராக அமைந்துள்ளது உச்சநீதிமன்ற தீர்ப்பு. தமிழக அரசின் தீர்மானத்துக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட உற்பத்தி குழு கண்காணிக்க வேண்டும். ஆக்ஸிஜன் உற்பத்தி முழுவதும் தமிழகத்துக்கும் மீதமுள்ளதை பிரித்து கொடுக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆனால் உச்சநீதிமன்றம் தமிழகத்தில் செயல்படும் ஆலையில் உற்பத்தியை மத்திய அரசுக்கு அளிக்க வேண்டும், அதற்கு தேவையான மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிரானது என்றும் இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு உச்சநீதிமன்றம் மதிப்பளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com